அரசியல்தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை செயல்வடிவம் பெறாமலும் போகலாம் – ஜெயக்குமார் !

ஒற்றைத் தலைமையை குறித்து அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அது செயல் வடிவம் பெறாமலும் போகலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பொதுக்குழுக் கூட்டம்

அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வருகிறார்கள். மேலும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை வழிநடத்தி வருகிறார். இந்தநிலையில், வரும் ஜூன் 23ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை

இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இரு தரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க தொடங்கினார்கள். இதனால் அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

போஸ்டர்கள்

இதன்பெயரில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகேயும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்சிக்குள் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு தான் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயக்குமார்

ஆலோசனை

இந்நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தீர்மானம் தயாரிக்கும் குழு இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உளப்பட பலரும் கலந்துகொண்டனர். இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்பட்டது. அதனால்தான் இவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

ஜெயக்குமார்

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வரும் 18 தேதி மறுபடியும் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் வருகிறார் என்பதால் தான் இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டோம் என்ற கருத்து தவறானது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பேசப்பட்ட ஒற்றைத் தலைமையை பற்றி அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது செயல் வடிவம் பெறலாம், பெறாமலும் போகலாம்’ என்று ஜெயக்குமார் கூறினார்.

Related posts