Editor's Picksஇந்தியா

மலினமான அரசியல் செய்கிறார் அண்ணாமலை ; மாணிக்கம் தாகூர் காட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பிணங்களை வைத்து மலினமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ்  கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  மாணிக்கம் தாகூர்.

நேற்றைய தினம் மக்களவையில் பேசிய மாணிக்கம் தாகூர், தமிழகம் எப்போதும் அமைதியாகவும், அனைவரது மத உணர்வுகளை மதித்து நடக்கக்கூடிய மாநிலமாகவே இருந்துவந்திருக்கிறது.

ஆனால், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது தமிழக பாஜக தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அண்ணாமலை என்பவர் தொடர்ச்சியாக மத ரீதியிலான மோதல்களை உண்டாக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளின் தற்கொலை விவகாரத்தில் கூட சிறுபான்மையினரை தொடர்புபடுத்தி, அவர்களை குற்றவாளிகளுக்கும் முயற்சிகளில் திட்டமிட்டு ஈடுபடுகிறார்.

எனவே, பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரது கட்சியை சேர்ந்தவரான அண்ணாமலையை இத்தகைய மலினமான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாதென அறிவுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related posts