தமிழ்நாடு

சொத்துக்காக தந்தையையே கொன்ற கொடூர மகள்! – காணமானால் போன நன்றி.

மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராம் என்பவர் அதே பகுதியில் கடைகளை கட்டி அதை வாடைகைக்கு விட்டு மாதம் லட்சக்கணக்கில் சம்பாரித்து வந்திருக்கிறார். சொத்துக்காக அவரது மகள் நிவேதா கூட்டாளிகளுடன் சேர்ந்து கிருஷ்ணாராமை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையாய் வந்த எமன்

கிருஷ்ணாராம் இவரது மனைவி பங்கஜ வள்ளி ஆகியோருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கொடைக்கானலில் இருந்து நிவேதா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த குழந்தைதான் தன் உயிருக்கு எமனாக போகிறது என்பதை அறியாமல் கிருஷ்ணராம் அந்த குழந்தையை தனது சொந்த மகள் போலவே பாசம் காட்டி வளர்த்தார். மகள் நிவேதாவுக்கு திருமண வயதான போது நல்ல இடத்தில் பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தார்.

ஆட்டோ ஓட்டுனருடன் காதல்

மகள் நிவேதாவோ கல்லூரி படிக்கும்போது ஆட்டோ ஓட்டுனரான ஹரிஹரன் என்பவருடன் காதல் வயப்பட்டார். இதனை அறிந்த கிருஷ்ணராம் மகளின் காதலை எதிர்த்தார். மகள் நிவேதாவோ இத்தனை நாள் வளர்த்த தந்தையை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோ ஓட்டுநர் ஹரிஹரனை திருமணமும் செய்தார்.

சொத்துக்காக நிவேதாவை திருமணம் செய்த காதல் கணவன் ஹரிஹரன், தந்தையிடம் சென்று சொத்தை பிரித்து வாங்கிவா என கேட்டிருக்கிறான். நிவேதாவும் வளர்ப்பு தந்தையான கிரிஷ்ணாராமை தொடர்பு கொண்டு சொத்து குறித்து கேட்டுள்ளார். தனது பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறிய உனக்கு என்னுடைய சொத்தில் பங்கு இல்லை என கடுமையாக கிருஷ்ணாராம் பேசியிருக்கிறார்.

சொத்து கேட்டு தகராறு

திங்கட்கிழமை அன்று நிவேதா அவரது கணவர் ஹரிஹரன் மற்றும் உடந்தையாளர் கார்த்திக் என்ற மூவரும் கிருஷ்ணாராம் வீட்டிற்கு சென்று சொத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். வீட்டை விட்டு ஓடிப்போன மகளை கண்ட தந்தை கிருஷ்ணாராம் மிகவும் ஆத்திரமடைந்தார்.

‘சொத்தில் ஒரு ரூபாய் கூட தர முடியாது’ என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். திருமண சம்பவத்திற்கு பிறகு கிருஷ்ணாராம் நிவேதாவை வெறுத்தாலும் தாய் பங்கஜ வள்ளி அவ்வப்போது மகளை தொடர்பு கொண்டு பண உதவியும் செய்து வந்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து, தந்தை கிருஷ்ணாராமை கொன்று விட்டால் சொத்து முழுக்க தனக்குத்தான் என்று நிவேதா தப்பு கணக்கு போட்டுள்ளார்.

கிருஷ்ணராமனின் கொலை

‘சொத்து முழுவதையும் கோவிலுக்கு எழுதி வைக்கப்போகிறேன்’ என கிருஷ்ணாராம் கூற ஆத்திரமடைந்த நிவேதா தனது கணவர் ஹரிஹரன் மற்றும் கூட்டாளி கார்த்திக் உடன் சேர்ந்து கிருஷ்ணாராமை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

கொலை செய்ததோடு மட்டும் இல்லாமல் கிருஷ்ணாராம் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலி, மோதிரங்கள் மற்றும் பீரோவில் இருந்த 70,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தனது கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றிருக்கிறார்.

விசாரணை

திங்கட்கிழமை மதியம் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் கணவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி பங்கஜ வள்ளி காவல்துறையினரை தொடர்பு கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிருஷ்ணாராமின் மனைவி பங்கஜ வள்ளியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

பின்னர்  வீட்டின் முன்புறம் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் கிருஷ்ணாராமின் வளர்ப்பு மகள் நிவேதா அவரது கணவர் ஹரிஹரன் கூட்டாளி கார்த்திக் உள்ளிட்டோர் வீட்டிற்குள் சென்றிருப்பதும், அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறுவதும் கேமராவில் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து வளர்ப்பு மகள் நிவேதா தான் தங்க சங்கிலி , மோதிரம், பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை திருடியது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நிவேதாவின் செல்போனை வைத்து அவர் இருந்த இடத்தை கண்டறிந்தனர். காரைக்குடிக்கு தப்பி சென்ற நிவேதா, ஹரிஹரன், கார்த்திக் மூவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் வளர்ப்பு மகள் நிவேதா மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கிருஷ்ணாராமை கொலை செய்தது அம்பலமானது.

 

Related posts