அரசியல்இந்தியாதமிழ்நாடு

மாணவர்களிடையே பாகுப்பாடா ? – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் !

வட மாநில மாணவர்களிடம் இருந்து தான் கொரோனா பரவுகிறது என வடமாநில மாணவர்களை இழிவுபடுத்தி பேசியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் 99 சதவீத பிஏ2 வகை கொரோனா பரவு வருகிறது. இவர் கடந்த 31ம் தேதி அன்று சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது வட மாநில மாணவர்களிடம் இருந்துதான் அதிக கொரோனா தோற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

ma.subramaniyan minister

உத்தர பிரதேச அமைச்சர் கண்டனம்

இதனை சில செய்திகளில் பார்த்த உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாதா அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தொற்றுநோய்களுக்கு மாநிலங்களோ எல்லைகளோ தெரியாது. தமிழக மருத்துவத்துறை அமைச்சரின் மிகவும் பொறுப்பற்ற பேச்சு வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

பதிலளித்த அமைச்சர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 01ம் தேதி அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, வட மாநில மாணவர்கள் மூலம் தொற்று பரவுவதாக கூறினேன் தவிர, வட மாநில மாணவர்கள் பரப்புவதாக குற்றம் சாட்டவில்லை. கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவாக உள்ளது. இறப்பு இல்லாத நிலை தொடர்கிறது.

தற்போது, சென்னையில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய் போன்ற கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பதுதான்.

அதிகரித்து வரும் கொரோனா

இந்தியாவில் டெல்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகிறபோது அவர்களின் மூலம், கொஞ்ச கொஞ்சமாக தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டு நானும், துறை சார்ந்த செயலாளரும் அந்த கல்வி நிறுவனத்திற்குச் சென்று அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினோம். மொத்தமாக 9000 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 237 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது குணமாக்கப்பட்டு அங்கு தொடர்ந்து படித்து வருகின்றனர்.

கல்வி நிலையங்களில் கொரோனா

இதேபோல் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தொற்று ஏற்பட்டபோதும், அங்கு சென்று வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வலியுறுத்தி, தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம்.

சத்திய சாய் பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்கள் அதிகம் பேர் தங்கி பயில்வதால், அங்கேயும் தொற்று ஏற்பட தொடங்கியது, அங்கும் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வட மாநிலத்தவர்கள் படித்து வருகின்றனர். அங்கும் 118 பேருக்கு தொற்று உறுதியானது.

iit chennai

அறிவுரைகள்

அதன்படி, நான்கு பேர் அமரக்கூடிய மேசை என்றால் இரண்டு பேரும், 6 பேர் அமர கூடிய மேசை என்றால் 3 பேர் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தற்போது பெரும்பாலும் பிஏ2 வகை கொரோனா தொற்றுத்தான் பரவுவதாகவும் இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் விரைவில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related posts