கடலூர் அருகே புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை. வீட்டில் கழிவறை இல்லாதது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தற்கொலையில் முடிந்து. இச்சம்பவம் கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கடலூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சார்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்த வருகிறார். இவரை இரண்டு வருடமாக காதலித்து வந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த மாதம் 6 தேதி ரம்யாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
கழிவறை இல்லை
தனது காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தன் கணவன் வீட்டில் கழிவறை இல்லையென்று ரம்யாவுக்கு தெரியவந்தது. தற்காலிகமாக ரம்யாவை சமாதனம் செய்தார் கார்த்திகேயன். மேலும், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாகவும், இல்லையென்றால் தனது வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச்செல்கிறேன் என்று திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ அல்லது கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லாமல் ஏமாற்றுவது குறித்து கார்த்திகேயனிடம் ரம்யா அவ்வவ்போது சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் அன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூக்குபோட்டு தற்கொலை
கழிவறை இல்லாத கணவன் வீட்டில் எப்படி குடித்தனம் நடத்துவது என்ற விரக்தியில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு கொண்டுள்ளார். இதனை பார்த்த தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
தாய் மஞ்சுளாவிடம் விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.