ஃபர்ஸ்ட் லுக்
சென்னை -28, வசூல் ராஜா எம் பி பி எஸ், அரண்மனை போன்ற திரைப்படங்களில் நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகர் நிதின் சத்யா. இவர் நடிப்பில் தற்போது ‘கொடுவா’ என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் இணை இயக்குனர் சுரேஷ் சாத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, தரண் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘கொடுவா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Best of luck team .. Happy to reveal the First Look of #koduvaa
Introducing @Nitinsathyaa as Murugan and @samyuktha_shan as Kayal
Congrats to the Team @dwarka_studios #BlazeKannan @SureshSathaiah1@dharankumar_c @KarthikNallamu1@EditorSabu@AzharFreeze @Subbu6panchu pic.twitter.com/XPOX1hdtFN
— G.V.Prakash Kumar (@gvprakash) December 30, 2022