இந்தியாசமூகம்சினிமா

பிரதமர் மோடியில் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

இரங்கல் பதிவு

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். 100 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வந்தார். இதனிடையே, ஹீராபென் மோடி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘மரியாதைக்குரிய மோடிக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts