இந்தியாதமிழ்நாடு

கச்சத் தீவு விவகாரம் – இலங்கையின் அட்டூழியத்தை அட்ஜெஸ்ட் பண்ணும் இந்திய அரசு!

அட்டூழியம் செய்யும் இலங்கை அரசு

கச்சத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதாக கூறி, இலங்கை அரசு கைது செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கைது செய்வது மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும், மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்யும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்தி, இந்தியாவிற்கு சொந்தமான கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

கச்சத் தீவு

இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருக்கும் கச்சத் தீவானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைத்துள்ளது. இங்கு புகழ் பெற்ற அந்தோனியார் கோவில் உள்ளது.

16 ம் நூற்றாண்டில் கச்ச தீவு ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி மன்னனுக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் இந்தியாவில் அதிகாரத்தை பிடிக்க தொடங்கிய ஆங்கிலேய அரசு சேதுபதி மன்னனிடமிருந்து கச்ச தீவை கைப்பற்றி அவரிடமே குத்தகைக்கு விட்டது. இதற்கான சான்றுகள் இந்திய அரசிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவு

1920 ஆண்டில் இருந்து, இலங்கை அரசானது கச்சத் தீவு எங்களுக்கே சொந்தம் என்று கூறிவந்தது. இந்நிலையில் இந்தியா சுகந்திரம் அடைந்த பிறகு 1974 இல் கச்சத் தீவை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது.ஒப்பந்தத்தின் படி தமிழக மீனவர்கள் கச்சத் தீவு பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பின்னாளில் அந்த உரிமையும் இலங்கை அரசால் மறுக்கப்பட்டு, கச்ச தீவு பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடந்து கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்தியாவிற்கு சொந்தமான ஒரு இடத்தை, எந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தமும் இல்லாமல் மற்ற நாட்டிற்கு தாரைவார்ப்பது முடியாத காரியம் என்றும், சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு இந்தியாவிற்கு சாதகமாகத்தான் வரும் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது, தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Related posts