கடந்த பாகத்தில் பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் அந்த குறிப்பிட்ட பங்குகளின் FUNDAMENTAL விசயங்களில் ஏற்ப்படும் மாற்றங்களே என்பதை பற்றி பார்த்தோம்.
மேலும் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஒரு குறிப்பிட்ட வழிகளை (FORMULAS) பின்பற்றியே நகர்வதாகவும் அந்த வழி முறையானது சில முக்கியமான விசயங்களை கண்டிப்பாக அதை பயன்படுத்துவோருக்கு தர வேண்டும் என்றும் அந்த முக்கியமான விஷயங்கள் எவை எவை என்பதினை பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் அந்த வழிகள் எப்படி தோன்றியது என்று பார்ப்போம்.
TECHNICAL ANALYSING என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற நகர்வுகளே ஆகும், அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது, அதாவது, இந்த TECHNICAL ANALYSING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.
அதற்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும், கிபி சுமார் 1880 இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல் முதலீடு செய்து தடுமாறிக்கொண்டிருந்த காலம், அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 என்ற ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average).
அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், இந்த விசயங்களை வைத்து ஒரு பங்கில் எப்பொழுது ENTRY ஆகலாம் எப்பொழுது PROFIT BOOKING செய்யலாம் என்பன போன்ற விசயங்களை எளிதாக முடிவு செய்ய பயனுள்ளதாக இருந்து வருகிறது, மேலும் இந்த TECHNICAL ANALYSING கிற்கென்று முக்கியமான சில விதிமுறைகளை நமக்கு ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ளார், அந்த முக்கியமான விதிமுறைகளில் ஒரு சிலவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.
PRINCIPLES OF TECHNICAL ANALYZING – BY CHARLES DOW
1-HISTORY REPEATS IT SELF
2-AVERAGES ARE DISCOUNTS
3-PRIMARY TREND CANNOT BE MANIPULATED
திரு CHARLES DOW அவர்கள் கொடுத்த முக்கியமான இந்த மூன்று விசயங்களை வைத்து சந்தையின் போக்குகளை நாம் TECHNICAL ANALYZING துணை கொண்டு எப்படி கணிக்க வேண்டும் என்பதினை நாம் அறிந்து கொள்ளலாம், இந்த விசயங்களை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
முதல் விதி:-
HISTORY REPEATS IT SELF
அதாவது பங்கு சந்தையை பொறுத்த வரை சந்தையில் முன்னர் நடந்த விஷயங்கள் தான் (உயர்வுகளும், வீழ்ச்சிகளும்) மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து வரும், அனால் வரும் முறைகளும், வழிகளும் வேண்டுமானால் மாறி இருக்கலாம், இதை இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம், அதாவது மனிதன் இந்த உலகத்தில் தோன்றி ஓரளவு ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கியது முதல் போர் என்பது இருந்து வருவது நாம் அறிந்ததே, ஆனால் நாளாக நாளாக மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கற்களில் இருந்து இன்று அணு ஆயுதம் வரை மாறி வருவது நாம் அறிந்ததே, இன்னும் நாளாக நாளாக ஆயுதங்கள் மாறும் ஆனால் போர் என்ற ஒன்று மாறுவதில்லை,
அதாவது ஆயுதங்கள் மாறினாலும், காரண காரியங்கள் மாறினாலும் இருவருக்கோ அல்லது இரு நாட்டிற்கோ நடக்கும் போர் என்றும் மாறாது, இதே போல் தான் சந்தையில் உயர்வுகளும், தாழ்வுகளும் என்றுமே மாறாது அனால் எதனால் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும், எவளவு தூரம் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும் என்ற காரண காரியங்கள் வேண்டுமானால் மாறி மாறி வரலாம், அனால் உயர்வு தாழ்வுகள் என்றுமே பங்கு சந்தையில் உடலும் உயிருமாக இருந்து கொண்டே இருக்கும், இதைத்தான் “HISTORY REPEATS IT SELF” என்று திரு CHARLES DOW அவர்கள் சொல்லி இருந்தார்,
சரி அடுத்த விதிகளைப்பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.