சினிமாவெள்ளித்திரை

தனுஷ் படத்தில் நடிக்கும் பிரபல கன்னட நடிகர்!

பிரபல கன்னட நடிகர்

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தனுஷ் தற்போது ராக்கி, சாணிக்காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தனுசுக்கு அண்ணனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவராஜ்குமார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts