ஜோத்பூர்: ஜோத்பூரில் இருபிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முடங்கியுள்ளது.
ரமலான் பண்டிகை
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மக்களும் ரமலான் பண்டிகையை கொண்டாட தயாராகினர். அதற்காக ஜோத்பூர் ஜலோரி கேட் பகுதியில் நேற்று இரவு ஒலிபெருக்கிகள், பேனர்கள், கொடிகள் என அந்த பகுதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது.
சிலையின் மீது கோடி
ஜலோரி கேட் பகுதியின் அடையாளமான போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸா சிலை ஒன்று அங்குள்ளது. ரமலான் பண்டிகைக்கு அலங்காரம் செய்தவர்கள் பிஸ்ஸாவின் சிலை மீதும் கொடியேற்றியதாக சொல்லப்படுகிறது. அதுவும் இந்து கொடியே அகற்றி விட்டு முஸ்லிம் கொடியே ஏற்றியதாக ஒரு பிரிவினர் கூறுகின்றனர். முஸ்லிம் கொடியே ஏற்றியதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலவரம்
இதனால் இந்து பிரிவினர் முஸ்லிம் கொடிகள், ஒலிபெருக்கிகள், பேனர்கள் என்று எல்லாவற்றையும் அகற்ற முற்பட்டுள்ளனர். அதை முஸ்லிம் பிரிவினர் தடுக்க சென்றதால் கலவரம் வெடித்ததாக சொல்லப்படுகிறது.
இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டனர். மேலும், மரக்கடைகளை கொண்டும், இரும்பு கம்பிகளை வைத்தும் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்து காவல் துறை வருவதற்குள் ஜலோரி கேட் பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.
போலீசார் தடியடி
கலவரத்தை தடுக்கவும், சூழ்நிலையே கட்டுக்குள் கொண்டுவரவும் போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். சிலர் போலீசார்கார்களும் திருப்பி கற்களை கொண்டு தாக்கினர். போலீசார் கடுமையாக போராடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதல்வர் அனுமதி
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சிலர் சமூகவலைத்தளத்தில் தவறான கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்புவதால் ஜோத்பூரில் இணைய சேவைகளை முடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் கலவரத்தை அடக்கவும், இனி நடக்காமல் இருக்கவும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் காவல் துறை செயல்பட அனுமதியளித்துள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் முழுவதும் மிக பெரிய அதிர்வலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.