சினிமா

“ஜன கண மன” அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது! மீண்டும் ஒரு கூட்டணி வெற்றிப்பெறுமா?

“ஜன கண மன” அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாள திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் வெற்றியடையுமா?

உலகளவில் திரைப்படங்களின் தரம் உயர்ந்துள்ளது. அதில் முக்கியப்பங்கு இந்திய திரைப்படங்களுக்கு உள்ளது. மேலும், அதிகப்படியான திரைப்படங்கள் இந்திய திரையுலகில் தயாரிக்கப்படுகின்றன, அதில்! “தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி”ஆகியவை அதிக திரைப்படங்களை அதிக பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன. இந்த வரிசையில் பெரும்பாலான படங்கள் தோல்வி நிலையில் உள்ளபோதும், சில படங்கள் மட்டும் தான் மக்களின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. இந்த வரிசையில் “ஜன கண மன” திரைப்படம், இடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. இப்படம் சமூக கருத்துக்களைக் கொண்ட முக்கியப் பதிவுகளை உள்ளடக்கிய படமாகக் கருதப்படுகின்றது.

இத்திரைப்பத்தின் கதாநாயகன் மலையாள நடிகர் பிருத்விராஜ், முக்கிய கதாபாத்திரமாக சுகுமாரன் சுராஜ் வெஞ்சாரமூடு, கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் இணைத்து நடிக்கும் திரைப்படமாக வெளிவரவுள்ளது. மேலும், நடிகர் “பிருத்விராஜ் சுகுமாரன், சுராஜ் வெஞ்சாரமூடு” இணைத்து “ட்ரிவிங் லைசென்ஸ்” என்ற திரைப்படம் வெளியாகி மலையாளத்தில் வெற்றியடைந்து ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

ட்ரிவிங் லைசென்ஸ்: திரையுலகிலும். மக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ஹீரோவான நடிகருக்கும் அந்த நடிகரின் ரசிகரான மோட்டார் இன்ஸ்பெக்டருடன் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வரும் பொது ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு அவர்களும் மக்களும் பார்க்கின்றன என்பதை இத்திரைப்படம் தெளிவாக எடுத்துரைக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

ஜன கண மன: ஒரு போலீஸ்காரரும், ஒரு குற்றவாளியும் குற்றவியல் அமைப்பைப் பற்றிய அவர்களின் கருத்துக்களைப் பற்றி நேருக்கு நேர் கலந்துரையாடல் மூலம் சமூக பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் கருவாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இதை தொடர்ந்து இணையத்தில் பல்வேறு தரப்பிலிருந்து படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் வருகின்றன.

ஏப்ரல் மாதம் 28 இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து வெளியாகும் திரைப்படம் இப்படம் வெற்றியடையுமா என்று பார்ப்போம்?

Related posts