Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»’உயிருள்ளவரை உஷா’ படத்தில் ரஜினி? – சுவாரஸ்யம் பகிர்ந்த டி.ராஜேந்தர்

’உயிருள்ளவரை உஷா’ படத்தில் ரஜினி? – சுவாரஸ்யம் பகிர்ந்த டி.ராஜேந்தர்

February 6, 20263 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

’உயிருள்ளவரை உஷா’ படத்தில் தனது கதாபாத்திரத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது என்று டி.ராஜேந்தர் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

டி.ராஜேந்தர் இயக்கி நடித்து கடந்த 1983இல் வெளியாகி, பட்டிதொட்டி எங்கும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ’உயிருள்ளவரை உஷா’. இப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரிதா, நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டதட்ட 43 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வருகின்ற பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ராதா ரவி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், நடிகை நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசும்போது, “‎நளினி, ரோஜா இரண்டு கதாநாயகிகளுக்கும் அண்ணா-வாக நடித்து இருக்கிறேன். இன்று வரையிலும் இரண்டு நாயகிகளும் அண்ணா என அழைப்பார்கள். என்னை கெடுத்தது டி.ஆர் தான். ஏனெனில் நான் அமெரிக்க செல்ல வேண்டிய தருணத்தில், ’உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்ததித்தின் விளைவாக பல படங்களில் வில்லன் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. பல முறை டி.ஆர் மகன் சிம்புவிடம் உங்கள் அப்பா போல நீங்கள் இல்லை. ”டிஆர் எப்போதும் டிஆர்” என சந்தோசமா சொல்வேன். 43 வருடங்களில் இவரை போன்ற நடிகரை நான் பார்த்தது இல்லை” என புகழாரம் சூட்டினார்.

இதையும் படிக்க :  சண்​டைக் காட்சி படப்​பிடிப்​பில் சம்யுக்தா காயம்

இதனைத்தொடர்ந்து டி ராஜேந்தர் பேசுகையில், “இன்றைக்கு இருக்கக்கூடிய இளம் இயக்குநர்களை அழைத்து விழா நடத்தி என்னுடைய திரைப்படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பல வெற்றிகளை நான் பார்த்து இருக்கிறேன் எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. ‘உயிருள்ளவரை உஷா’ என்னுடைய சொந்த திரைப்படம். இப்படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவருக்கு முதலில் கதாநாயகி இருக்கக்கூடிய காட்சிகளை போட்டு காண்பித்தேன்.

அவருக்கு பிடிக்கவில்லை, கதாநாயகியை மாற்ற வேண்டும் என தெரிவித்தார். எதற்காக என கேட்கும் போது கதாநாயகி பார்ப்பதற்கு குதிரை முகம் போல இருக்கிறது. தமிழ் திரை உலகுக்கு இது சரிவராது என கூறினார். நான் சவால் விடுத்து, ”அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது எப்படி வருகிறேன் என்று பாருங்கள்” என கூறிவிட்டு 4000 அடி பிலிம் ரோலை வாங்கிக் கொண்டு மீண்டும் நளினியை வைத்து படப்பிடிப்பு நடத்தினேன். பின்னர் நான் இயக்கிய காட்சிகளை பார்த்த ஃபைனான்சியர்கள் வியந்தனர்.

’உயிருள்ளவரை உஷா’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பு
’உயிருள்ளவரை உஷா’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
நான் என் சிந்திணைக்கு கொடுத்த மரியாதை வேறு எதற்கும் கொடுத்தது கொடுத்து இல்லை. இந்த படத்தின் மறு வெளியீடு, இசை கோர்ப்பு பணிகளுக்காக 38 நாட்கள் வேலை செய்துள்ளேன். அடுத்ததாக ஒரு திரைப்படம் எடுக்க இருக்கிறேன், அதில் காதல் ஐம்பது சதவிகிதம், காமெடி 50 சதவிகிதம் நிச்சயம் இருக்கும். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் காமெடி படங்களையே பெரிதும் விரும்புகிறார்கள்.

இதையும் படிக்க :  தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’ஜனநாயகன்’ வந்தால் தள்ளிப்போக ரெடி

பிப்ரவரி 6ஆம் தேதி சிலம்பாட்டம் திரைப்படம் வெளிவருவதால் என்னுடைய உயிருள்ளவரை உஷா திரைப்படம் 13ஆம் தேதி வெளியாகிறது. இடையில் ’ஜனநாயகன்’ திரைப்படம் வெளிவந்தால் வெளியீட்டு தேதியை மாற்றிக் கொள்வேன். கடந்த காலங்களில் நான் சத்திரியனாக இருந்தேன், இப்போது சாணக்கியனாக இருக்க விரும்புகிறேன். இந்தப் படத்தில் நான் நடித்த ஜெயின் ஜெயபால் கதாபாத்திரம் ரஜினிக்காக எழுதப்பட்டது.

இதையும் படிங்க: ராம் சரண் நடிக்கும் ’பெத்தி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
உயிருள்ளவரை உஷா படத்தில் ரஜினி?

இருப்பினும் ரஜினி அந்த சமயத்தில் பட தயாரிப்பினை வேறு ஒருவரிடம் வழங்கினால் நடிக்கத் தயார் எனக் கூறினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். ஒருவேளை ரஜினி நடித்திருந்தால், நான் பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஆகவும் மாறி, இன்றைய தேர்தல் களத்தில் நின்று இருப்பேன். நானே நடித்ததால், இன்றைக்கு நடிகனாக எனக்கு கிடைத்த அனைத்து பாராட்டுக்களுக்கும் சொந்தக்காரர் நிச்சயம் ரஜினி தான். இந்த படத்தை வேறு எவரது தலையிலும் நான் கட்டவில்லை. தமிழ்நாடு முழுக்கவே சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது இதற்கு என்னுடைய விநியோகஸ்த நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்” என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது!
Next Article போதைப்பொருள் வழக்கில் நடிகை உட்பட 9 பேர் கைது – கோலிவுட்டில் அதிர்ச்சி

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.