ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2 பயங்கரவாதிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபுர் பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினர் கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. இதில், வீட்டில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த என்கவுண்ட்டரில் இரண்டு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது. தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

