ஆண்டு தோறும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரானது இந்த ஆண்டு இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு புதிய அணிகளும் இணைந்துள்ள நிலையில், போட்டிகளை காண ஆர்வமாக உள்ளனர் ஐபிஎல் ரசிகர்கள்.
அதே சமயம், இந்த ஐபிஎல் தொடரில் புதிய அணிகளின் வருகை மட்டுமின்றி, முக்கிய அணிகளிலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரவீந்தர் ஜடேஜா.
ஐபிஎல் போட்டி தொடரானது தொடங்கிய ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவருபவர் ‘தல’ தோனி. தனது தனிப்பட்ட விளையாட்டு திறனாளும், ஒட்டுமொத்த அணியை திறம்பட வழிநடத்தும் ஆற்றலாலும் இந்திய அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் ஏகப்பட்ட வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தோனி, ஏற்கனவே இன்டர்நேஷனல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த நிலையில் தற்போது அதிலிருந்தும் விலகியுள்ளார். அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தோனி ஓய்வுபெற்று விடுவார் என செய்திகள் வெளியாகிவந்தது குறிப்பிடத்தக்கது.