கொடநாடு கொலை வழக்கில் ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொள்ளை வழக்கு
நீலகிரி, கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து சில முக்கிய நபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்ச்சியாக வந்தது. தற்போது இந்த வழக்கில் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்க்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், அவர் கோவையில் தனிப்படை போலீசார் முன்பு ஆஜரானார்.

