ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் கடிதம்
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடி வேலைக்கு சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய பாக்கி வழங்கப்படாததாலும் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். மீனவர்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை எடுக்க இந்திய தூதரக மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.