தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் ரிலீஸ்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம். இதில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட்18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#Thiruchitrambalam Trailer – Delivering on 7th Aug @ 7pm ! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas #ThiruchitrambalamTrailer pic.twitter.com/4tIaMNy3AK
— Sun Pictures (@sunpictures) August 5, 2022

