Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நெல்லை காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் – பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நெல்லை காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் – பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

March 19, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெல்லை மாவட்டத்தில், காரில் இருந்து எரிந்த நிலையில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர்கள் இறப்பதற்கு முன் விஷம் அருந்தி இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த பெட்டைக்குளத்தில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரம், கார் ஒன்றில் எரிந்த நிலையில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த முகமது ரபீக், அவரது மனைவி சையது நஸ்ரின் பாத்திமா மற்றும் 15 வயது மகள், 12 வயது மகன் எனத் தெரியவந்தது.

காவல்துறை சார்பில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள், கைவிரல் ரேகை நிபுணர்கள், மோப்பநாய் அனுப்பப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த முகமது ரபீக் அங்கிருந்த தனது சொந்த வீட்டை சமீபத்தில் விற்றுள்ளார். அவரது மனைவி சையது நஸ்ரின் பாத்திமா, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

முகமது ரபீக் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கடன்காரர்கள் அடிக்கடி முகமது ரபீக் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், இதனால் அவர் அதிக மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் 4 நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது மனைவியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் குடியேற குடும்பத்தோடு அவர்கள் வந்திருக்கலாம் எனவும் போலீசாரின முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க :  புதுக்கோட்டை: பஜ்ரங்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி கொலை

இதற்கிடையே, எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட அவர்களின் கார், நேற்று முன்தினம் நள்ளிரவு (மார்ச் 16) ஆத்தங்கரை பேருந்து நிலையம் மற்றும் சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்ற சிசிடிவி காட்சியும் வெளியானது.

தற்போது ரம்ஜான் நோன்பு காலம் நடைபெற்று வரும் சூழலில் இறப்பதற்கு முன்பு, நான்கு பேரும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களிடம் இருந்த பழைய துணிகள் உள்ளிட்ட உடைமைகளை தானமாக வழங்கிவிட்டு கிளம்பிச் சென்றுள்ளனர்.

எனவே, விரக்தியில் இருந்த முகமது ரபீக், குடும்பத்தோடு காரை தீவைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். குறிப்பாக முகமது ரபீக் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது அதில், ‘காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம், தற்கொலையாகவோ அல்லது விபத்தாகவோ இருக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்த நிலையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில், முகமது ரபீக், அவரது மகன் உடல்கள் முழுமையாக எரிந்துவிட்டதால் அதில் இருந்து எந்த ஒரு தடயமும் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதையும் படிக்க :  கரூர் விவகாரத்தில் CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு திமுக மிரட்டல்

ஆனால், முகமது ரபீக்கின் மனைவி மற்றும் மகளின் எரிந்த சடலங்களை உடற்கூறு ஆய்வு செய்தபோது, அவர்கள் விஷம் உட்கொண்டதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. உடற்கூறு ஆய்வுக்கு பின்பு, 4 பேரின் உடல்களும், முகமது ரபீக்கின் மாமனார் வசம் ஒப்படைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ரபீக் குடும்பத்தோடு தற்கொலை செய்த்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக ரபீக்கின் மனைவி மற்றும் மகள் விஷம் அருந்தியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே 4 பேரும் விஷமருந்தி விட்டு, பின்னர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டனரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவனவிலங்கு வேட்டைக்காக வைத்திருந்த 43 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் – இருவர் கைது
Next Article ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் சிக்கல்? ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.