Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என சந்தேகம்! வெட்டி சாய்த்த கணவர்!

மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என சந்தேகம்! வெட்டி சாய்த்த கணவர்!

March 15, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நெல்லை பேருந்து நிலையத்தில் வைத்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் கருத்து வேறுபாடு முற்றியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மனைவி பேச்சியம்மாள் தனக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், சுதாகர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேச்சியம்மாள் இன்று (மார்ச் 15) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த அவரது கணவர் சுதாகர் பேருந்து நிலையத்தில் வைத்து பேச்சியம்மாளை வழிமறித்து பேசியுள்ளார். அதில் கோபமடைந்த பேச்சியம்மாளுக்கும், சுதாகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுதாகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை தாக்க முயன்றுள்ளார். அதனைக் கண்டு சுதாரித்த பேச்சியம்மாள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் விடாது துரத்தி சென்ற சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்திலிருந்த போலீசார், பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், சுதாகர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரணடைந்தார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கிட்னி திருட்டுஉடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

முதல்கட்ட விசாரணையில், பேச்சியம்மாள் அடிக்கடி செல்ஃபோனில் பேசியதால், அவரது நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சுதாகர் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாகவே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பேச்சியம்மாள் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பதற்காக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தும் வந்துள்ளார்.

தினமும் பாலமடையில் இருந்து பேருந்தில் நெல்லை சந்திப்புக்கு வருவது வழக்கம். இன்றும் வழக்கம்போல் அவர் வேலைக்கு வந்தபோது சுதாகர் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதனுஷ் நடிக்கும் கர! முதல் பாடல் வெளியானது!
Next Article பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி. கைது – வேலியே பயிரை மேய்வதாக அன்புமணி வேதனை

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.