ஆடி அமாவாசை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் 30ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
தடை விதிப்பு
திருநெல்வேலி, காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முழுவதுமாகசெயல்பட இருப்பதால் களக்காடு முன்பந்துறை புலிகள் காப்பகம் உட்பட்ட திருநெல்வேலியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வரும் 30ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. அதன்படி பாபநாசம் அகஸ்தியர் அருவி,மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில் உள்ள தங்கும் விடுதி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

