சினிமாவெள்ளித்திரை

படபிடிப்பை தொடங்கிய ஹன்சிகா படக்குழு!

2010ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

புதிய படம் 

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்த இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரசிகர்களால் ‘சின்ன குஷ்பு’ என்று அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் சமீபத்தில் வெளியான ‘மஹா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

Related posts