வணிகம்

தங்கத்தின் வருங்கால நிலவரம்!

பெண்களுக்கு தங்கம் என்றாலே தனி பெருமை. இன்று பல பெண்கள் தங்கத்தினால் தான் தங்களின் அழகை மெருகேற்றுகின்றனர். தென்னிந்தியாவில் தங்கம் அதிகப்படியாக வைத்திருக்கும் பெண்களின் வரிசையில் தமிழ்நாட்டுக்கே முதலிடம்.

முதலீட்டு கருவி

தங்கம் ஒரு முக்கிய முதலீட்டு கருவியாகும். ஆண்டாண்டு காலமாக மக்கள் அனைவரும் தங்கத்தில்தான் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர். பணச்சிக்கலின்போது நமக்கு உதவும் மிகப்பெரிய உதவியாளர் தங்கம் தான் .

காரணம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து முதலீட்டு உலகம் சற்று நிலை குலைந்து இருந்தது. தங்கச்சந்தை கடந்த ஆண்டு மந்தமாக இருந்தாலும் தற்போது எழுச்சி பெற தொடங்கியுள்ளது. தங்க விலை உயர்வுக்கு காரணம் புவி அரசியல் பிரச்சனை தான் என்று திறனாய்வாளர்கள் கூறினாலும் வேறு சில காரணங்களும் தங்க விலை உயர்வுக்கு காரணமாய் இருக்கிறது.

தங்கத்தின் தேவை

உக்ரைன் மீதான பொருளாதார தடையால் அங்கு நிலவும் போர் சூழலால் ஏற்படும் பங்கு சந்தை சரிவு, பண வீக்கம், பொருளாதார நெருக்கடி மத்தியில் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என முதலீட்டாளர்கள் கருதுவதால் தங்கத்தின் தேவை தற்போது அதிகரித்துள்ளது.

பண வீக்கம்

புவி அரசியல் பிரச்சனைகளால் விலையேற்றத்தை கண்ட தங்கம் அதிலிருந்து வேகமாக விடுபடக்கூடும் என்றாலும் பணவீக்கம் பின்தொடரும். எனவே இந்த நிலையில் தங்கத்தின் விலை குறையும் என்றும் கணித்துவிட முடியாது என்கிறார் டிடி செக்யூரிட்டிஸ் தலைவர் பார்ட் மேலக்.

வரும் காலம்

அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் அடிப்படை விலை உயர்ந்ததே காணப்படும். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் பெரும்பாலான பொருட்களின் தேவையை உயர்தகூடும். இதனைத்தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related posts