அரசியல்சமூகம்தமிழ்நாடு

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி !

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பால் பொருட்கள் அனுமதி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று மனு மீதான விசாரணையில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts