இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ராமேஸ்வரம் துறைமுக கடல் பகுதியில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்களும் அதனை சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இதனால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

