நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து காண்போம்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் 20 ஆயிரத்து 726 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 100 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 ஆக உள்ளது.
ஆக இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 997 ஆக உள்ளது.
தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியவர்களின் மொத்த எண்ணிக்கை 201 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரத்து 771 ஆகும்.

