தனது இரண்டாவது மனைவியான ஹைடியின் மகள் ஜனாவுடன் எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் ரகசிய உறவில் இருப்பதாகவும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் தந்தை
எரோல் மஸ்க்கிற்கு தனது முதல் மனைவியான மே மஸ்க்குடன் பிறந்தவர்கள் எலான் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டாஸ்கா மஸ்க். இவர்கள் பிரிந்த நிலையில், ஹைடி என்பவரை திருமணம் செய்து கொண்டார் எரோல் மஸ்க். இந்நிலையில், ஹைடியின் மகளான ஜனாவும், எரோல் மஸ்க்கும் ரகசிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், எரோல் மஸ்க், ஜனா இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் இது எலான் மஸ்க்கிற்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே எலான் மஸ்க்கின் தந்தை அளித்த பேட்டி ஒன்றில், ‘எலான் மஸ்க்கிற்கு என் காதலை ஏற்க மறுப்பதற்கு காரணம் ஜனா, எலான் மஸ்க்கின் சகோதரி முறை’ என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

