தூத்துக்குடி நகரில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த சரவணன் (27). இவர் தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, யாரோ முகம் தெரியாத நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மீளவிட்டான் சின்னகண்ணுபுரத்தை சேர்ந்த மோகன் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக தென்பாகம் துணை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய மோகனை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

