சினிமாவெள்ளித்திரை

டிரைவர் ஜமுனா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், ‘வத்திக்குச்சி’ பட இயக்குனர் பா.கின்ஸ்லின் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts