சினிமாவெள்ளித்திரை

ஐஸ்வர்யா ராஜேஷ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இதில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் ஜியோ பேபி இயக்கிய இப்படம் நேரடியாக ஓடிடி வெளியானது. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை காதபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts