சினிமாவெள்ளித்திரை

விரைவில் வெளியாகும் டிமான்ட்டி காலனி -2!

புதிய அப்டேட்

நடிகர் அருள்நிதி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, ரமேஷ் திலக், சனத் ஆகியோர் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் மூலம் இயக்குனர் அஜய் ஞானமுத்து பிரபலமானார். இதனிடையே அண்மையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், டிமான்ட்டி காலனி -2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts