விஜய் பாடல்
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனிடையே வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ நேற்று வெளியானது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலே ஒரு மில்லியன் பார்வைகளை தொட்டது.
இந்நிலையில், ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
#SoulOfVarisu hits 5M views now ❤️
🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/IrxEpRnl9n— Sri Venkateswara Creations (@SVC_official) December 21, 2022

