கல்விசமூகம்தமிழ்நாடு

பள்ளிகள் விடுமுறை : 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கையா ? – பள்ளிக்கல்விதுறை விளக்கம் !

விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் இயக்குனரகம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில், போராட்டமாக தொடங்கியது வன்முறையாக முடிந்தது. இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இதற்கு பள்ளிகல்வித்துறை, விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அரசின் எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்கள் 18ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனையடுத்து அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது விவகாரம் தொடர்பாக 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதற்கு ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் அனுமதியின்றி விடுமுறை அறிவித்த விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது.

Related posts