ரிலீஸ் தேதி
திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் ‘சார்’ என்ற தலைப்பிலும், தமிழில் ‘தயாரிப்பாளர் நாக வம்சிஎன்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வாத்தி’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.