டிரைலர் ரிலீஸ்
2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’ இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Super happy to launch #LoveToday trailer! My best wishes and congratulations to the entire team 🤗https://t.co/YSsNbAPU4A@pradeeponelife @thisisysr @Ags_production @SVC_official #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @i__ivana_
— Vijay Deverakonda (@TheDeverakonda) November 17, 2022

