சினிமாவெள்ளித்திரை

பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட பிரேம் ஜி!

பிரபல இயக்குனர் 

2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில்அண்மையில் திரையரங்கில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், 2014ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தனது குறும்படத்தை ட்விட்டரில் நடிகர் பிரேம்ஜியை குறிப்பிட்டு பகிர்ந்தார். இவரின் இந்த பதிவை தற்போது பிரேம்ஜி அமரன் பகிர்ந்து ‘சார் உங்கள் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts