வெளியீட்டு உரிமை
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
After the success of #FIR, we’re happy to join hands with @TheVishnuVishal again. #GattaKusthi releasing on Dec 2nd, in cinemas near you.@VVStudioz @RaviTeja_offl @RTTeamWorks #AishwaryaLekshmi @ChellaAyyavu @Richardmnathan @justin_tunes @editor_prasanna @anbariv @thanga18 pic.twitter.com/TVoagmqtsa
— Red Giant Movies (@RedGiantMovies_) November 18, 2022

