பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
முதலமைச்சர் மணிஷ் சிசோடியா
இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவின் இணைந்துவிடுங்கள். அப்படிச் செய்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் முடித்துவைக்கப்படும்’ என்று தூது அனுப்பியுள்ளது. பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் ஒரு ரஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் கூட யாருக்கும் அஞ்சமாட்டேன். சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்’ என்பதுதான் என ட்விட்டரில் பாஜகவுக்கு பதிலளித்துள்ளார்.
मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे
मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो
— Manish Sisodia (@msisodia) August 22, 2022