சினிமாவெள்ளித்திரை

அருள்நிதி நடிக்கும் டைரி படத்தின் புதிய அப்டேட் !

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டைரி திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்

இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டைரி. பவித்ரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், ஜெயப்பிரகாஷ், தணிகை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை கதிரேசன் தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டைரி படத்தின் ‘ராசாதி ராசன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts