அரசியல்இந்தியாசமூகம்பயணம்விவசாயம்

வேலையில்லா திண்டாட்டம் – டெல்லியில் விவசாயிகள் போராட்டம் !

வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட  பிரச்சினைகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்துக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் தலைமை தாங்கி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதல் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை போல் இல்லாமல், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு தொடர்புள்ள அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\. இநநிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts