Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»ஐபிஎல் 2026: தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் – சிஎஸ்கே சிஇஓ உறுதி

ஐபிஎல் 2026: தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் – சிஎஸ்கே சிஇஓ உறுதி

March 12, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐபிஎல் 2026 சீசனில் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19-வது சீசன் இந்தாண்டு மார்ச் 28-ம் தேதி மூதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதே சமயம் இந்த தொடருக்கான போட்டி ஆட்டவணையானது இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்றும் வீரர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்பில் தங்களின் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் எதிர்வரும் ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பாரா? தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலுள்ல மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்பதை உறுதி செய்தார்.

இதையும் படிக்க :  போராடித் தோற்ற கொல்கத்தா..! டெல்லி அணி அபார வெற்றி..!

இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், “என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்று கேட்டால் அதனை என்னால் உறுதிபடுத்த முடியாது. ஏனெனில் அது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் எடுக்கும் முடிவே தவிர, நிர்வாக ஊழியர்களால் எடுக்கும் முடிவு அல்ல.

எனவே அவர் இத்தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாடுவாரா அல்லது இம்பேக்ட் வீரராக வீரராக விளையாடுவாரா என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேசமயம், தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள காரணத்தால் சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளும் சென்னையில் தான் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுடைய போட்டிகளை நாங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே விளையாடுவோம். எனவே பிசிசிஐ அட்டவணையை அறிவிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே குறித்த கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், “இந்தியா உலகக் கோப்பையை வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதிலும் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு மற்றும் தூபே இருவரும் சிறப்பாக செயல்பட்டது எங்களை கூடுதல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதனால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,”நானும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகளில் காண்கிறேன். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த நியமனமும் செய்யப்படவில்லை” என்று கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசஞ்சு சாம்சனை ஆதரிக்க காரணம் என்ன? மௌனம் கலைத்த கௌதம் கம்பீர்
Next Article ‎’தமிழக மக்களுக்கு நன்றி’ – ‘தாய் கிழவி’ வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,136 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.