ஷாருக்கான், கத்ரீனா கைஃப் மற்றும் கார்த்திக் ஆர்யன், ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதுவரை உலகம் பார்த்திராத இந்த புதுவகை வைரஸ் உலகத்தையே தலைகீழாக புரட்டி போட்டது. மனித சங்கிலியால் பரவி வந்த இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டது.
இரண்டாவது அலை
இதனால் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இரண்டாவது அலையாக ஓமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா தொற்று தாக்க தொடங்கியது. இதன்பெயரில் மீண்டும் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொற்றின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
ஹிந்தியில் கொரோனா
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றின் 3வது அலை தலைதூக்க தொடங்கியது ஆனால் அது பெரிதளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மும்பையில், நடிகர் ஷாருக்கான், கத்ரீனா கைஃப் மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கான் படங்கள்
பிரபல ஹிந்தி நடிகரான ஷாருக்கானின் படமான பதான், ஜனவரி 2023ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என்று கூறப்பட்டது.
படப்பிடிப்பு ஒத்திவைப்பு
மேலும், ஷாருக்கான், அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வெளியானதையடுத்து அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஷாருக்கான் படப்பிடிப்புகளை ஒத்தி வைத்துவிட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கத்ரீனா கைஃப்
இது தவிர நடிகர்கள் கத்ரீனா கைஃப், கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் ‘Merry Christmas’ படத்தின் படப்பிடிப்பிலும் கத்ரீனாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
மும்பையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 4வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.