அரசியல்தமிழ்நாடு

இந்துக்கள் நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம் சர்ச்சை பேச்சு!

நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் ஹரி ஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியுள்ளார்.

மதுரை ஆதீனம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ இந்து பரிஷத்(VHP) துறவியர் இரண்டாம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் கோவை ஆதீனம் மற்றும் மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மதுரை ஆதீனம் கூறுகையில் ‘பாரதியார் மட்டும் தற்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்ப டாஸ்மார்க் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியிருப்பார்.

ஹரி ஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்

‘ஆதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள். ஆதீனங்கள் அரசியல் பேசாமல் யார் பேசுவது ? அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை ? அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்கராக வந்து இருந்து கொள்கிறார்கள். ஆன்மிகவாதிகள் ஏன் அரசியல் பேசக்கூடாது. திருக்கோவில்களில் சொத்துக்கள் திருடப்படுகிறது.

Adheenam

திராவிடர்கள் இரட்டைவேடம்

திராவிடம் என்று சொல்லி விபூதி பூச மறுக்கிறார்கள். கோவில் நகைகளை திருட பார்க்கிறார்கள். தமிழகத்தின் பண்பாடு திருகோவில்குள் தான் உள்ளது. திராவிடர் என்று சொல்லி இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் அறநிலையத்துறை உண்டியலில் காணிக்கைகள் போடக்கூடாது. உண்டியல் பணம் அந்தந்த கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள்.

அறநிலையத்துறை கலைப்பு

அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். திருவாசகம், திருக்குறள், வேதமந்திரங்கள், நூல்களை அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள். இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிவரும் நடிகர் விஜய் படத்தை அவமதிக்க வேண்டும். இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்து கேட்டால் சங்கி என்று கூறுகிறார்கள்.

Actor Vijay

அடுத்த பிறவியில் வவ்வால்

கோவில் நம்மைவிட்டு போனால், நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டு குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. இந்துக்கடவுகளை இழிவுபடுத்துதல், கோவில் நிலங்களை குத்தகைக்கு கொண்டு பணம் தர மறுப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாக தான் பிறப்பார்கள்’ என சாபம் விட்டார்.

அரசியல்வாதிகள் கொள்ளை

‘அறநிலையத்துறை பொல்லாத துறையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் யாருக்கும் கோவில் நிர்வாகத்தை பற்றியே தெரியாது. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் மாறிவருகிறது. அறநிலையத்துறையை கலைத்து விட்டு கோவில்களை ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.

மோடி வாழ்க

சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என கூறிய சு. வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் கோவிலில் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். திருவோடு, கோவணம் தவிர திராவிட கட்சிகள் வேற என்ன வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி நோய் இன்றி நீண்ட நெடிய நாள் வாழவேண்டும்’ என மதுரையில் ஆதீனம் ஹரி ஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியுள்ளார்.

Modi

Related posts