சினிமாவெள்ளித்திரை

சிரஞ்சீவி பட புதிய அப்டேட்!

புதிய அப்டேட்

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘லூசிபர்’ இத்திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனைத்த்தொடர்ந்து தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ராஜா லூசிபர் படத்தை தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் கதாநாயகனாக சிரஞ்சீவி நடிக்க, நயன்தாரா, சல்மான் கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில், ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏக்கோ ராஜா’ என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளார்.

Related posts