மைசூரில் நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் , நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைப்பெற்று வந்தது. படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், மைசூரில் நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

