அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மூவர்ண தேசிய கொடி
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்களுக்கு தேசிய கொடி உடனான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 20 கோடி வீடுகளில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூவர்ண தேசிய கொடியை பறக்கவிட பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், மக்கள் அனைவரும் வரும் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை தங்களது சமூகவலைதள பக்கங்களிலன் முகப்புப் படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
அறிக்கை
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

