திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
திருத்தணி ஜெ.ஜெ. நகரில் திமுக பிரமுகர் மோகன் முகம் தெரியாத நபர்களாக சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மோகனை பின் தொடர்ந்து வந்த 2 நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் திருத்தணி டு அரக்கோணம் சாலையில் உள்ள சிசிடிவியில் பதிவான கட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

