எச்.வினோத் இயக்கதில், நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூன்று பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும், இந்த படம் 2.25 மணி நேரம் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், துணிவு படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில ஆபாச வார்த்தைகளை மியூட் செய்யவும் படக்குழுவினருக்கு, தணிக்கை குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

