தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கதில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘காலேஜ் ரோடு’. கபாலி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் முக்கிய காதபாத்திரங்களில் நடித்த லிங்கேஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மோனிகா, பரணி, மெட்ராஸ் வினோத், ஆனந்த்நாகு, அன்சர், அக்சய்கமல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைக்க, எம்பி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘காலேஜ் ரோடு’ திரைப்படம் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

