சினிமாவெள்ளித்திரை

‘பத்து தல’ பட டப்பிங் பணியை நிறைவு செய்த பிரபல நடிகை!

டப்பிங் பணி

வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் உருவாகியுள்ளது. ‘முஃப்தி’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள இப்படத்தை இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கி வருகிறார். இவர் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்க, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் அண்மையில் நடிகர் கவுதம் கார்த்திக் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்ததாக தெரிவித்தார். இந்நிலையில், ‘பத்து தல’ படத்தில் தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts